இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?.

'ஈமான் (விசுவாசம்) இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்' என்று முஹம்மது நபி(ஸல்) நவின்றார்கள்.

ஓர் உண்மை முஸ்லிம் பின்வரும் அடிப்படை அம்சங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும்: அவையாவன

1. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் மட்டுமே என விசுவாசம் கொள்ள வேண்டும். அவன் எத்தகையவன் என்றால் நிலையானவன், ஒப்புமையற்றவன், வல்லமைமிக்கவன், முடிவற்ற மெய்பொருள், அன்பு நிறைந்தவன், கருணைமிக்கவன், அனைத்தையும் படைத்தது பரிபாலிக்கும் ரட்சகன்.

2. அவனுடைய தூதர்களை, அவர்களுக்கிடையில் எந்தவித ஏற்ற தாழ்வும் இன்று விசுவாசம் கொள்ளவேண்டும். அல்லாஹ் மனிதர்களின் தேவைக்கு தக்கவாறு பல்வேறு நாட்டவர்க்கும், பல்வேறு சமூகத்தினருக்கும் நல்வழி காட்டவும், தீமை செய்தோரை எச்சரிக்கை செய்யவும் தூதர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் மனித சமுதாயத்தை எவ்வாறு நேர்வழி படுத்த வேண்டும், எவ்வாறு இறைவனை வணங்கிவழி பட வேண்டும் என்று கற்று கொடுப்பதற்காக வேதங்களையும் இறக்கியருளினான். கடைசி இறை வேதமான குரானில் அவர்களில் 25 தூதர்களின் பெயர்கள் குறிப்பிட பட்டுள்ளது. முஹம்மது(ஸல்) அவர்கள் இத்தூதர்களில் இறுதியானவரும் சிறப்புமிக்கவரும் ஆவார்.

3. அல்லாஹ்வினால் இறக்கியருளப் பட்ட வேத நூல்கள் மீதும், கட்டளைகளையும் விசுவாசம் கொள்ளவேண்டும். அவனுடைய தூதர்கள் தானும் நேர்வழி நடந்து, அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறவல்ல நேரிய பாதையை அவர்களது சமுதாயத் தினருக்கு எடுத்துக் காட்டினார்கள். இறைவன் திருக்குரானில் அவனின் தூதர்கள் இப்ராகிம்(அலை), மூசா(அலை), தாவூத்(அலை) மற்றும் ஈசா(அலை) அவர்களுக்கு வழங்கிய வேத நூகள் பற்றியும் கூறியுள்ளான். அந்த நூல்கள் தற்போது வழக்கில் இருந்தாலும், மனித திரிபுகளால் அவை அதன் தூய தன்மையை இழந்துவிட்டது. ஆனால் இறைவன் அருளிய வேதங்களில் திருக்குரான் மட்டுமே எவ்வித மாற்றங்களுமின்றி பூரணமாகவும், நம்பகதகுந்ததாகவும், உயிரரோட்ட முடையதாகவும் உள்ளது.

4. அல்லாஹ்வின் வானவர்கள்(மலக்குகள்) மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டும். அவர்கள் ஒளியால் படைக்கப் பட்டவர்கள். இறைவனின் உத்தரவுகளை செய்து முடிப்பதும், இறைவனை வணங்குவதும், துதிப்பதுமே அவர்களின் பணிகளாகும். இவர்களுக்கு ஊண், உறக்கம், திருமணம், ஆசாபாசம், சந்ததி ஆகியன கிடையாது. இவர்களில் அதிக சக்தியுடைய ஜிப்ரீல்(அலை) மூலமே இறைவன் தனது தூதர்களுக்கு இறை வேதங்களை அனுப்பிவைத்தான்.

5. இறுதி தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டும். என்றோ ஒருநாள் இவ்வுலகமும் அவற்றில் உள்ளன யாவும் அழிந்துவிடக்கூடும். பின்னர் அவைகள் யாவும் அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணைக்காக எழுப்பப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் தான் இவ்வுலகில் செய்த செயல்களுக்கு ஏற்ப பிரதிபலனை பெற்றுக் கொள்ளும். அல்லாஹ்விற்கு பொருத்தமாக, நீதியாகவும், நேர்மையாகவும் நடந்தவர்கள் இன்பங்கள் நிறைந்துள்ள சுவர்க்கத்தை பெறுவார்கள். அங்கேயே அவர்கள் முடிவுற்ற காலம் வரையிலும் தங்கிருப்பார்கள். அல்லாஹ்விற்கு மாற்றமாக குழப்பங்கள் செய்து கொண்டும், இணைவைத்துக் கொண்டும் இருந்தவர்கள் , பயங்கரமான நெருப்பும், கொடிய வேதனைகளும் நிறைந்த நரகத்தை சென்று அடைவார்கள் அவர்கள் முடிவற்ற காலம் வரை அங்கேயே தங்கிருப்பார்கள்.

6. இவ்வுலகில் நடைபெறும் நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டபடியே நடக்கின்றன என்று முழுமையாக நம்ப வேண்டும். உலகிலுள்ள எல்லா படைப்பினங்களும் அவனின் ஆணைப்படியே செயல் படுகின்றன. அவனுடைய கற்பனைக்கும், திட்டங்களுக்கும் மாற்றமாக எதுவும் நடக்காது. எல்லா பொருளின் மீதும் அவனது அறியும் சக்தியும் சூழ்ந்திருகிறது. தீர்க்க மான அறிவும், அருளும் கொண்ட அவனது காரியங்கள் அனைத்தும் ஒரு நோக்கமும் கருத்தும் உடையதாகும். இவற்றை ஆழமாக சிந்திக்கும் போது மன அமைதி கூடிகொண்டே போகுறது , அவனுடைய செயல்கள் தீமையானதகவோ, என்னால் விளங்கி கொள்ள முடியாததாகவோ இருக்கலாம். அட்செயல்கள் யாவும் மனிதனின் படிப்பினைக் காகவோ அல்லது சோதனைக் காகவோ ஏற்படுகிறது என்று நம்ப வேண்டும்.


*----------------*


Reference:
1. tamilislam.com
2. saaid.net
3. suvanathenral.com

Comments

 1. Al Quran Surah 112


  Word for word translation
  112:1. (நபியே?!) நீர் கூறுவீராக (Qul)
  அல்லாஹ் அவன் (Allah-hu)
  ஒருவனே.(Ahad)


  112:2. அல்லாஹ் (எவரிடத்தும்)( Allah) தேவையற்றவன் (Samad).  112:3. அவன் (எவரையும்)பெறவுமில்லை
  (Lam= he did not,


  Yalid= father (anybody)


  (எவராலும்)
  பெறப்படவுமில்லை.
  Wa=and ,
  Lam=was not,
  Yulad = born to any
  112:4. அன்றியும், (wa)
  அவனுக்கு நிகராக எவரும் இல்லை


  (Lam Yakul = there is not ,
  lehum( to him)
  kufvan=equal
  Ahad = anybody)


  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்