இஸ்லாம் என்றால் என்ன? (what is Islam?)

நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஒரு குடும்பம் நல்ல முறையில் செயல்படுவதற்கு ஒரு நல்ல தலைமை, அதேபோல ஒரு நகரத்தின் நல்ல வளர்ச்சிக்கு அதன் சிறந்த தலைமை அவசியமானதொன்றகும். நாம் நன்றாக அறிய முடியும் இந்த அண்டத்தில் எதுவும் தானாக நடப்பதில்லை. மேலும் நம் அண்டத்தில் இருக்கின்ற பூமியாகட்டும் மற்ற கோள்கலாகட்டும் இவையனைத்தும் பல ஆயிரம் கோடி வருடங்களாக ஒரு குறிப்பிட்ட கட்டளைகளுடன், ஒரு சீரான செயல்பாட்டுடன் இயங்குவதை நம்மால் உணரமுடியும். நம்மால் அழைக்க முடியுமா இவையாவும் தானாக நேர்ந்த ஒரு விபத்து என்று? அல்லது மனிதனால் அவற்றின் செயல்பாடுகளைத்தான் நிர்ணயிக்க முடியுமா?.


இந்த அண்டத்தை ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் ஒரு சிறிய பகுதியைத்தான் பெற்றிருக்கிறான். எனவே அண்டங்களும், மனிதனும் மற்ற உயிரினங்களும் ஒரு மிகப்பெரிய சக்தியின் கீழ் செயல்படுகின்றன. அந்த ஒரு மிகப்பெரிய சக்திதான் இந்த பூமியையும் மற்றும் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுத்திய படைப்பாளன் ஆகும். அந்த சக்திவாய்ந்த படைப்பாளனை தான் மனிதர்கள் கடவுள் "அல்லாஹ்" என்று அழைக்கிறார்கள்.

அவன் எத்தகையவன் என்றால் அவன் மனிதன் இல்லை ஏனென்றால் மனிதனால் மற்ற மனிதனையோ விலங்கையோ படைக்க முடியாது. அவன் விளங்கும் அல்ல தாவர இனமும் அல்ல. அவனுக்கு உருவம் கிடையாது, அவனுக்கு உருவச்சிலைகள் கிடையாது. எனவே யாவற்றையும் படைத்த இறைவன் அவன் படைத்த யாவற்றையும் விட தனித்தவன்.


இறைவனை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வழிகள் உண்டு. நமக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையிலிருந்து அவனை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் மனிதனை நெறிபடுத்துவதக்காகவும் வாழ்வியல் நெறிமுறையை விளக்குவதற்காகவும் தூதுவர்களையும் இறைவேதத்தையும் இறக்கி வைத்துள்ளான். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைதூதர்களின் வாழ்க்கை முறையின் மூலமும் இறைவேதத்தின் மூலமும் நாம் இறைவனைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.


இஸ்லாம் என்பது இறைவன் தன் கடைசி இறைதூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு எவற்றை வழங்கி கற்றுகொடுத்தானோ அவற்றை முழுமையாக ஏற்று இறைவனுக்கு கீழ்படிந்து நடப்பதாகும். இஸ்லாம் என்பதன் தமிழ் பொருள் 'கீழ்படிதல்' 'சரணடைதல்' என்பதாகும். இஸ்லாம் என்பது ஓரிறை கொள்கை ஆதலால் நாம் வாழும் வாழ்க்கை முறையை அர்த்தமுள்ளதாகவும் மற்றும் மூடபழக்க வழக்கங்களில் இருந்து விலகி இறைவனைச் சார்ந்த மார்க்கமாகவும் இஸ்லாம் திகழ்கிறது. இஸ்லாம் ஓரிறை கொள்கையை வலியுறுத்துவதால் உலகில் உள்ள அனைவரையும் ஓர் இறைவனின் கீழ் கொண்டுவருகிறது. இது ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேவுள்ள உறவினை நெருக்கமாக்குகிறது எனவே மனிதன் தான் செய்த நட்பலனுக்கு ஏற்றவாறு கூலி கொடுக்க படுகிறான்.


இஸ்லாம் என்பது புதிய மார்க்கம் அல்ல மாறாக இதே போன்ற இறைவனின் கட்டளைகள் முன் சென்ற நபிமார்களுக்கும் சொல்லபட்டிருக்கிறது. ஆதம்(அலை) , நுஹ்(அலை), இப்ராகிம்(அலை),இஸ்மாயில்(அலை), தாவூத்(அலை), மூசா(அலை) மற்றும் ஈசா(அலை). ஆனால் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை திருக்குரான் இஸ்லாத்திக்கு ஒரு முழுவடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.


திருகுரான் இறைவனால் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப் பற்ற வேதமாகும் மற்றும் இது இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு மூலதனமாகவும் திகழ்கிறது. அருள்மறையாம் திருமறை திருக்குரான் இறை நம்பிக்கையின் ஆதாரமாகவும், நன்மை தீமைகளை பிரித்து அறிவதக்கும், மனிதனின் தோற்ற்றத்தையும், இறை வழிபாடுகளையும், அறிவை வழங்கும் பெட்டகமாகவும், கருணையின் வடிவாகவும், மனிதன் இறைவன் தொடர்பை விளக்கு வதாகவும், மனிதனின் கடமையை விளக்கி கூறுவதாகவும் திருக்குரான் விளங்குகிறது. அது மற்றுமின்றி சமூகம், அரசியல், பொருளாதாரம், நீதி துறை ஆகியவற்றை தெளிவாக விளக்குவதாகவும் திருக்குரான் விளங்குகிறது. ஹதீத் என்பது முஹம்மது(ஸல்) அவர்களினால் கற்றுதரபட்டதும் , அவர்களின் செயல்முறைகளையும் மற்றும் திருக்குரான் வசனங்களின் விளக்கங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் தொகுப்புகள் அன்றைய சகாபாகளின்(நபிதோழர்கள்) மூலம் பெறப்பட்டதாகும்.

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: