Posts

Showing posts from July, 2010

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! (Allah, One and Only to be Worshiped)
அல்லாஹ்,  அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும்  ஒரே  இறைவன் ஆவான்.  அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும்,  பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான்.  அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான்.  அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான்.  அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி.  அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான்.  அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: 
(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.( அல் குர்ஆன் 31:23).
வணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி…

மஹரும் ஜீவனாம்சமும்

மஹரும் ஜீவனாம்சமும்:
திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது.  இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை, மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான்.  தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக்கூடும்.  அந்த நிலையை எல்லாம் எண்ணி பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது. 
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்ஆன் 4:4).
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம்.  இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவரு…

திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'

திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை': ( QURAN ON FINGERPRINTS)

ஒரு நாள் இறந்து மக்கிப் போன மனித எலும்புத் துண்டுடன் ஒரு மனிதர் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து " நபியே நீர் கூறுவீராக!  நான் இறந்து இதைப் போன்று எலும்பாய் மக்கிய பிறகும் அல்லாஹ் என்னை மீண்டும் உயிர்ப்பிப்பானா?" என்று வினவினார். அக்கேள்விக்கு இறைவன் தனது பதிலை பின் வரும் புனித குர்ஆன் வசனங்களின் மூலம் சொல்கிறான்.
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (1)நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (2)(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? (3)அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (4)(அல் குர்ஆன் 75: 1-4) 
இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு வலியுறுத்துவது என்னவென்றால், அவன் நம்  மக்கிய எலும்புகளையும் ஒன்று சேர்க்கும் வல்லமை படைத்தவன், மேலும் அம்மனிதனின் விரல் நுனியிலுள்ள ரேகையைக் கூட  முன்னிருந்தவாறே செவ்வையாக்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்று புலப்படுகிறது.
அறிவியல…

இஸ்லாமிய திருமணம்-4

இஸ்லாமியதிருமணம்தொடர்ச்சி...
கட்டாயக் கல்யாணம்:
முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும்.  பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும்.
பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல் குர்ஆன்  2:232).
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்திவுள்ளான்.  இந்த உரிமையை பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.
பெண்கள் தமது விருப்பத்த…

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

படைப்பினங்களின் தோற்றம்: களிமண்மற்றும்தண்ணீர்(The Origin of Creation: Clay&Water)

அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே நினைவு கூறுவீராக!) "நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில் ;(71) நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்" (72) (அல்-குரான் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்ற…

இஸ்லாமிய திருமணம்-3

இஸ்லாமியதிருமணம்தொடர்ச்சி...

பெண்ணின்பொறுப்பாளர்:

மனப்பெண்ணின்சம்மதம்அவசியம்என்றாலும்ஒருபெண்தான்திருமணத்தைநடத்திக்கொள்ளஅனுமதிக்கவில்லை. மாறாகஅவளதுபூரணசம்மதத்துடன்அவளதுபொறுப்பாளர்தான்நடத்திவைக்கவேண்டும். மணமகன்சார்பில்இத்தகையபொறுப்பாளர்எவரும்தேவையில்லை.

பொறுப்புள்ளநபரின்முன்னில்லையில்திருமணம்நடக்கும்போதுபெண்களைவஞ்சகமாகஏமாற்றும்ஆண்களிடமிருந்துபெண்களுக்குபாதுகாப்புக்கிடைக்கிறது. பெண்களுக்குச்சேரவேண்டியமகர்தொகைபோன்றவற்றைப்பெற்றுத்தருவதற்கும்பெண்கள்சார்பில்பொறுப்பாளர்அவசியம்.

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின…

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

Benefits of Friday (Jumma) Prayer in Tamil:

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....

ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன…

இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!

இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது…

தேனீக்கள் (Honey Bee)

எல்லாம்வல்லஅல்லாஹ்வின்திருப்பெயரைக்கொண்டுஆரம்பம்செய்கிறேன்...

தேனீக்கள் (Honey Bee):

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்ரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அண்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் தேனீக்கள் காணபடுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றி காணபடுகின்றன. தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீ (Drone)
3. வேலைக்காரத் தேனீ (Workers Bee - Non Productive Female).

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல்பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப் படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) விடை பகர முடியாத பல செயல்பாட…

இஸ்லாமிய திருமணம்-2

இஸ்லாமியதிருமணம்தொடர்ச்சி...

திருமணஒழுங்குகள்:

திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.

மணப்பெண்தேர்வுசெய்தல்:

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும் இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.

பெண்கள்அவர்களின்செல்வத்திற்காகவும், அவர்களின்அழகுக்காகவும், அவர்களின்பாரம்பர்யத்துக்காகவும் அவர்களின்நன்னடத்தைக்காகவும்மணந்துகொள்ளப்படுகின்றனர். நீநன்னடத்தைஉடையவளைத்தேர்வுசெய்துவெற்றியடைந்துகொள்என்றுநபிகள்நாயகம்(ஸல்) அவர்கள்கூறினார்கள்.(அறிவிப்பவர்: அப…