இஸ்லாமிய திருமணம்-4

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...
கட்டாயக் கல்யாணம்:

முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும்.  பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும்.

பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல் குர்ஆன்  2:232).

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்திவுள்ளான்.  இந்த உரிமையை பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.

பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாக கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது.  ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்திவுள்ளனர். 

முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்கள? என்று கேட்டார்.  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றவருக்கு மணமுடித்து கொடுத்தார்கள்.  (நூல்: புகாரி 2310,5029,5120)
வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம்(ஸல்) கண்டிக்கவில்லை.  விபச்சாரம் செய்வதற்க்கு தான் வெட்கப் படவேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.

உம்மு சுலைம்(ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.  அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார்.  அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள், நீரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள்.  அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.  (நூல்: நசயீ 3288).

பெண்கள் தமது வாழ்க்கை துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள். ஆனாலும் அவர்கள் தமது பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும்.  பொறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: