இஸ்லாத்தின் தூண்கள் (The Pillars of Islam)

அளவற்ற அருளாளனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

இஸ்லாத்தின் தூண்கள் என்ற இந்த பதிப்பில், இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் யாவை என்பது பற்றி சுருக்கமாக காண்போம். இஸ்லாம் ஐந்து அம்சங்களினால் நிறுவப்பட்டுள்ளது அவையாவன:

1. சாட்சி கூறுதல் (The declaration of Faith)

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதிநாள் வரையிலும் இம்மனித சமுதாயங்கள் அனைத்திற்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அவனுடைய இறுதித் தூதரும், அடிமையுமாவர் என்று சாட்சி (ஷஹாததைன்) கூறுதல். இதன் மூலம் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைகளையும், முஹம்மது நபி(ஸல்) வாழ்ந்து காட்டிசென்ற வழிமுறைகளையும் தமது வாழ்க்கை முறையாக எடுத்து நடக்க கடமைப்பட்டுள்ளனர்.

2. தொழுகை (Prayers)

ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகையை அல்லாஹ்வுக்காக தொழ வேண்டும். தொழுகை அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வலிமைப் படுத்துவதோடு, உயர்ந்த ஒழுக்கமான வாழ்விற்க்கு வழிகாட்டுகிறது. மேலும் தொழுகை மனதினை தூய்மைப் படுத்துவதோடு, தீய மானக்கேடான காரியங்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

ஐவேளை தொழுகைகளாவன:

  • பாஜர்(Fajr (فجر)) - அதிகாலை தொழுகை
  • ளுகர் (Dhuhr (ظهر))- மதிய வேளை
  • அஸர் (Asr (عصر)) - மாலை நேரம்
  • மக்ரிப் (Maghrib (مغرب)) - சூரிய மறைந்தபின்
  • இஷா (Isha'a (عشاء)) - இரவு நேரத்தொழுகை
3. நோன்பு (Fasting the month of Ramadan)

ரமலான் மாதம் முழுவதும் தொடராக நோன்பு வைக்க வேண்டும். அதிகாலையில் இருந்து சூரியன் அஸ்தமனம் வரை உண்ணாமலும், பருகாமலும் மற்றும் கலவியல் செய்யாமல் இருப்பதோடு தன்னை தீய எண்ணங்களிலிருந்தும் , செயல்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளவேண்டும். நோன்பு சகோதரத்துவத்தையும், அன்பையும், இறைபக்தியையும், பொறுமையும், பிறர் நலம் பேணும் தன்மையையும், மனவுறுதியையும் அதிகப் படுத்துகிறது.

4. சகாத் (Zakah)

சகாத்
(தர்மம்) என்பது பொருளாதாரம் சம்பந்தப் பட்ட வணக்கமாகும். அதன் பொருள் தூய்மைப் படுத்துதல் என்பதாகும். சகாத் என்பது ஒவ்வொருவரும் தான் சம்பாதித்த பணத்திலோ, பொருளிலோ குறிக்கப் பட்ட தொகையை விட மேலதிகமாக இருக்கும் போது அவற்றிலிருந்து குறிப்பிட்ட தொகையையோ அல்லது அளவையோ குறிக்கப் பட்டவர்களுக்கு தர்மமாக வழங்குவதாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் சகாத் ஆழ்ந்த தத்துவங்களையும், மனிதாபிமான சிறப்பியல்புகளையும், சமுதாய பொருளாதார மேம்பாடுகளுக்கு சிறந்த திட்டமாக விளங்குகிறது.

5. ஹஜ்( pilgrimage to Makkah)

பொருளாதார வசதியும், தேக ஆரோக்யமும் உள்ள ஒருவர் ஹஜ் கடமையை தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்.


*------------------*
அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே).
Reference:
saaid.net
tamilislam.com


Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: