இஸ்லாம் :அத்தௌஹீத்

அறபு மொழியில் அதன் வரைவிலக்கணம் ஒருமைப்படுத்தினான் , ஏகத்துவப்படுத்தினான் என்ற பொருளைக் கொடுக்கும்.
படைத்தது பரிபாலிக்கும் தன்மையைக்கொண்டும், அவன் ஒருவனே கடவுள் தன்மையை சார்ந்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்.மேலும் அவனுக்கே அழகிய பெயர்கள் , உயர்ந்த பண்புகள் உண்டு என்றும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதி தூதர் என்று நம்புதல், இன்னும் திருக்குரான் மற்றும் நபி வழி நடப்பதே ஆகும்.

தௌஹீத் என்பதன் மூலம் நாடப்படுவது என்ன?
இப்னு தைமியா (றஹ்) அவர்கள் கூறினார்கள் " தூதர்கள் கொண்டு வந்த தௌஹீத் என்பது, கடவுள் தன்மையை அல்லாஹ் ஒருவனுக்கே தரிபடுத்த வேண்டும் என்பதைத்தான், வணங்கப்பட தகுதியான இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என சாட்சி கூறுவதன் மூலம் அவனையன்றி வேறு வாரையும் வணங்கமாட்டர்கள்,அவன் மீது அன்றியே பொறுப்பு சாட்டமாட்டர்கள், அவனுக்காகவே அன்றி எதையும் தொடரமாட்டர்கள், அவனுடைய விடையத்துகாகவே அன்றி எதிர்ப்புக் காட்டமாட்டார்கள்,அவனுக்காகவே அன்றி செயர்ப்படமாட்டர்கள். எனவே படைத்தது பரிபாலிக்கும் தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. தௌஹீத் இல்லாத எந்தவொரு செயலுக்கும் பெறுமதி இருக்காது.
அல்லாஹ் கூறுகிறான்:
"எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை, புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எத்தன மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது. இதுவே வெகு தூரமான வழிகேடாகும்." (14:18)

தௌஹீதைப் பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
"ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக! இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஹ்மின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக! அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (47:19)

தௌஹீத் மூன்று வகைப்படும்:
முதல் வகை: தௌஹீத் றுபூபிய்யாஹ்

படித்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் ஒருவனே என ஒருமைப்படுத்தல் :
அதாவது, நிச்சயமாக தூய்மையான உயர்ந்த அல்லாஹ்தான் எல்லா அடிமைகளையும் படைத்தான்,அவன்தான் அவர்களை நிர்வகிக்கிறான் என உறுதி கொள்ளுதல்.அதாவது, படைப்பு, உணவளித்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல் போன்ற செயல்களை கொண்டு அல்லாஹ்வையே ஒருமைப்படுத்தல்.இதனை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருத்த இணைவைப்பாளர்கள், யஹுதிகள், நஸாராக்கள், (கிறிஸ்தவர்கள்) நெருப்பு வணங்கிகள் நம்பி இருந்தார்கள்.இந்த தௌஹீதை முன்வந்தவர்களில் தஹ்ரிய்யாக்கள், தற்காலத்தில் உள்ள கம்யுனிஸ்ட் காரர்களைத் தவிர வேறு எவரும் மறுக்கவில்லை. இந்தத் தௌஹீத் எம்மனிதனையும் இஸ்லாத்திலும் நுழைத்துவிடாது, மற்றும் அவர்களின் இரத்தமோ,பொருளோ பாதுகாக்கப்படாது, இன்னும் மறுமையில் நரகத்தை விட்டும் அவனை தூரமாக்காது, அனால் இதனுடன் (தௌஹீத் உலூஹிய்யாஹ்) வணக்கப்படுவதற்குரிய கடவுள் தன்மையை அல்லாஹ் ஒருவனுக்கே என நம்பி செயற்படுத்தினாலே தவிர. ஹதீதிலே வந்துள்ளது போல் இயற்கையிலேயே இத்தௌஹீத் (தௌஹீத் றுபூபிய்யாஹ்) பதியப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையிலேயே பிறக்கிறார்கள், எனினும், அதனை அவர்களின் பெற்றோர்களே யஹுதிகளாக, அல்லது கிறிஸ்தவனாக, நெருப்பு வணங்கியாக ஆக்குகின்றனர்"
அல்லாஹ் கூறுகிறான்: " உங்களுக்கு வானத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று (நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள் "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?"என்று நீர் கேட்பீராக. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்தது பாதுகாக்கும் அல்லாஹ், இந்த உண்மைக்குப்பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழி கேட்டைத் தவிர வேறில்லை (இப்பேருண்மையை விட்டு நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (10:31-32)

இரண்டாவது வகை : தௌஹீதுல் உலூஹிய்யாஹ்:
வணக்கங்களைக் கொண்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல். அதாவது பிரார்த்தனை,நேர்ச்சை, அறுத்துப் பலியிடல்,ஆதரவு வைத்தல், அஞ்சுதல், பொறுப்புச் சாட்டல், ஆசை வைத்தல், பயப்படல், தஞ்சம் அடைதல் போன்ற வணக்க வழிபாடுகளைக் கொண்டு உயர்வான அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்.
அன்றும் இன்றும் இந்த ஒருமைப்படுத்தலிலேயே (தௌஹீதிலேயே) சண்டைகள் ஏற்ப்பட்டது. இதனைத்தான் தூதர்களும் தங்கள் சமூகத்தாரிடம் எடுத்துக் கூறினர். ஏனெனில், தூதர்கள் (அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக) அவர்களின் சமூகம் கொள்கையாகக் கொண்டுள்ள தௌஹீதுர் றுபூபிய்யாஹ் உறுதிபடுத்தி, தௌஹீதுல் உலூஹிய்யாஹ்வின் பக்கம் அம்மக்களை அழைப்பதற்காகவே வந்தார்கள். அல்லாஹ் நூஹு (அலை) அவர்களைப் பற்றி குறிப்பிடும் பொது கூறுகிறான்:
"நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்.அவர் (அவர்களை நோக்கி) 'நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன். நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்ககாதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்" (என்று கூறினான்). (11:26)
மேலும் கூறுகிறான்:
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணைவைக்காதீர்கள்". (4:36)
இந்த தௌஹீதுதான் அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வின் உரிமையும், மார்க்கவிடயங்களின் அடிப்படையுமாகும். இன்னும் குர்-ஆனும் இதனை உறுதிப்படுத்தி, இதனைக் கொண்டே அன்றி நன்மோட்சம் பெற முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

மூன்றாவது வகை: பண்புகள், பெயர்களை ஒருமைப்படுத்தல்:
அல்லாஹ் தனக்கு தானே பெயர் சூட்டியவைகள், தனது வேதத்தில் அல்லது தனது தூதர் மூலம் வர்ணித்துக் கொண்டவைகளைக் கொண்டு அவனை ஒருமைப்படுத்துதல். அதாவது அவன் சூட்டிக்கொண்டவைகளை திரிவு இல்லாமல், எதையும் இல்லை எனக் கூறாமல், ஒப்புவமை கூறாமல், உதாரணம் கூறாமல் தரிபடுத்துவதாகும்.


Reference:
Hisnut thouheed (ஏகத்துவப் பேழை)

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: