இஸ்லாத்தின் பார்வையில் 'பொறாமை':

பொறாமை

அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). (அல் குரான் 113:5)

என்று
துஆ செய்தவனாக...

ஒருவன் நம்மை விட சிறந்த இடத்தை பெற்றுவிட்டாலோ, நல்ல பதவியில் அமர்ந்துவிட்டாலோ, வசதி பெற்றுவிட்டாலோ உடனே நமக்குள் பொறாமை வந்து விடுகிறது. நமக்கு கிடைக்காதது அவனுக்கு கிடைத்து விட்டது என்று நம் மனம் நினைக்கிறது.

ஒருவரிடம் இருக்கும் பொறாமை என்னும் கொடிய கிருமியை மற்றொருவர் எளிதாக அடையாளம் காணமுடியும். ஆனால் நம்மிடம் இருப்பதை நாம் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. நாம் பொறாமை படவில்லையே என்றே எண்ணுவோம்.

இறைவன் அவனது திருமறையில் கூறுகிறான்,

(நபியே) நீர் கூறுவீராக: " அல்லாஹ்வே! (இம்மை, மறுமையின் சகல) ஆட்சிக்கு அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய்; மேலும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய்; இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய்; நன்மை(யாவும்) உன் கைவசமே (இருகின்றது). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அல்-குரான் 3:26).

இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் நடக்கும் நண்மையையும், தீமையையும் அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவனுடைய நாட்டத்தை பொறுத்தே அது அமையும்.

எப்பொழுது நாம் ஒருவருடைய வளர்ச்சியைக் கண்டு அல்லது சிறப்பை கண்டு பொறாமை கொள்கிறோமோ, அது இறைவனின் நாட்டத்தின் மீது பொறாமை கொண்டதற்கு சமமாகிறது. அதுமட்டுமின்றி இறைவனின் நாட்டத்தை குறை கூறும் அளவிற்கு அது செல்கிறது.

நமக்கு இவ்வுலகில் சிறப்பும், வளர்ச்சியும் வேண்டுமென்றால் நம்மை படைத்த இறைவன் நமக்கு கற்று தந்த துஆவை அவனிடம் கேட்டால் போதுமானது. இறைவன் நாடினால் அதனை மிகச்சுலபமாக அடைந்து விடலாம்.

பொறாமை நம்முடைய நற்செயல்களையும், நற்சிந்தனைகளையும் அழித்துவிடும் நெருப்பைப் போன்று.

இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான்:

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (அல் குரான் 3: 120)

------நன்மையையும், தீமையும், இன்பமும், துன்பமும் அல்லாஹ் உன் புறத்திலிருந்தே என்று சாட்சி கூறுகிறேன்.நன்றி: சகோ. வசிர் அஹ்மத்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: