திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'

திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை': ( QURAN ON FINGERPRINTS)

ஒரு நாள் இறந்து மக்கிப் போன மனித எலும்புத் துண்டுடன் ஒரு மனிதர் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து " நபியே நீர் கூறுவீராக!  நான் இறந்து இதைப் போன்று எலும்பாய் மக்கிய பிறகும் அல்லாஹ் என்னை மீண்டும் உயிர்ப்பிப்பானா?" என்று வினவினார். அக்கேள்விக்கு இறைவன் தனது பதிலை பின் வரும் புனித குர்ஆன் வசனங்களின் மூலம் சொல்கிறான்.

கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (1) நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (2) (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? (3) அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (4) (அல் குர்ஆன் 75: 1-4) 

இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு வலியுறுத்துவது என்னவென்றால், அவன் நம்  மக்கிய எலும்புகளையும் ஒன்று சேர்க்கும் வல்லமை படைத்தவன், மேலும் அம்மனிதனின் விரல் நுனியிலுள்ள ரேகையைக் கூட  முன்னிருந்தவாறே செவ்வையாக்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்று புலப்படுகிறது.

அறிவியல் உண்மைகள்:

 • ரேகை நான்காம் மாத கருவிலேயே தோன்றி, அம்மனிதனின் வாழ் நாள் முழுவதும் மாற்றம் ஏதுமின்றியிருக்கும்.
 • மனிதனின் வெளிப்புற மற்றும் உட்புற தோலின் இணைப்புகளால் ஏற்படும் வளைவுகளே ரேகைகள்.
 • இவ்வளைவுகள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வேறுபட்டிருக்கும் , அது இறந்த, நிகழ்  மற்றும்  வருங்கால மனிதர் எவருடனும் ஒற்றிருக்காது.
 • கிபி 858 ஆம் ஆண்டு, வில்லியம் ஹெர்ச்செல் என்னும் ஆங்கில விஞ்ஞானி, ரேகைகள் மற்றொருவருடன் ஒத்துபோகாது என்று சுட்டிக்காட்டினார். எனவே தான் மனிதனை அடையாளம் காண்பதற்கு ரேகைகள் பயன்படுத்தபடுகிறது
 • உடற்கூற்று ஆய்வாளர்கள் வயதாலும், இடத்தாலும் மாறுபட்ட பல மக்களை ஆய்வுகள் செய்து, இப்பரந்த உலகத்தில் எவருக்கும் ரேகைகள் ஒத்துபோகாது என்று ஒத்துகொண்டனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைவசனம் கூறுகிறது மக்கிய அனைத்து  விரல்களின்  ரேகைகள் கூட மீண்டும் செவ்வையாக்கப்படும் . கியாம நாளின் போது இவ்வனைத்தையும் மீண்டும் படைக்கும் இறைவனின் வல்லமை நமக்கு விளங்குகிறது. முழு அழிவுக்கு பின் தீர்ப்பு நாளில்  அனைத்து  ஜீவராசிகளையும் தன் தனி அடையாளத்துடன் மீண்டும் உயிர்பிப்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள தனி வல்லமை.

ஆதலால், ரேகைகளும் எல்லாம் வல்ல இறைவனின் சான்றாகும். மேலும் இச்சிறிய இடத்தில் நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்ட ரேகை பதிவுகளும் இறைவனின் உயர்வை எடுத்துகாட்டுகிறது.இது நமது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்ட விந்தையல்லவா?.
எல்லா புகழும் அவனுக்கே சொந்தம்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்:

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல் குர்ஆன் 41:53).

Comments

 1. gud article. keep your good work. may Allah will shower his blessing on us.

  ReplyDelete
 2. Mashaa Allah.todarungal

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: