A Research!

மனித இனத்திற்காகவே இறைவனால் படைக்கப்பட்டதே தவிர குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அல்ல.

குர்ஆனை ஆராய்ந்தே அது இறை வேதம் என்று அறிந்து கொள்ளுங்கள். மூடத்தனமாக நம்ப வேண்டாம்.

குர்'ஆன் இறை வேதம் என்பதற்கான சான்றுகள். (1431 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கப்பட்ட வேதம்)

1 . இது போல் இயற்ற முடியாது என்ற அறை கூவல்.

- 17 : 88 - இந்த குர்'ஆனை போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும் , ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருந்தாலும் இதனை போன்று அவர்கள் கொண்டு வர முடியாது , என்று (நபியே நீர் கூறுவீராக.

- 28 : 49 - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் , அவ்விரண்டையும் ( குர்ஆனையும், தவ்ராத்தையும்) விட அதிக நேர் வழி காட்டுகின்ற வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; அதனை நான் பின்பற்றுகிறேன் என்று நபியே நீர் கூறுவீராக.

- 52 : 34 - எனவே அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதனை போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

- 11 : 13 - அல்லது, இதனை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என்று கூறுகிறார்களா? "இது போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள், இன்னும் அல்லாஹ்வைத்தவிர உங்களுக்கு இயன்றவர்களையும் நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால். என்று நபியே நீர் கூறுவீராக.

- 2 : 23 - மேலும், நம் அடியார் (முஹம்மது - அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) மீது நாம் இறக்கி வைத்த (வேதத்) தில் நீங்கள் சந்தேகதிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதை போன்ற ஓர் அத்யாயத்தையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வை தவிர உங்களுடைய உதவியாளர்களையும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்.

- 10 : 38 - "அல்லது இதனை (நம் ரசூலாகிய) அவர் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா?. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்று ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வை தவிர உங்களுக்கு சாத்தியமானவர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள் " என்று நீர் கூறுவீராக.


2 . முரண்பாடின்மை:

4 : 82 - இந்த குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

41 : 41 - நிச்சயமாக எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தங்களிடம் வந்த போது நிராகரித்தார்களோ அத்தகையோர் ( அதற்குரிய கூலி கொடுக்கப்படுவார்கள்) ; நிச்சியமாக இது கண்ணியமான வேதமாகும்.

41 : 42 - அதன் முன்னாலும் , அதன் பின்னாலும் பொய் அதனிடம் சேராது - புகழுக்குரிய
ஞானமிக்கோனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டதாகும்.

3 . தவ்ராத்தை கொண்டு வருமாறு அறை கூவல்.

48 : 29 -
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.

3 : 93 - தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன் இஸ்ராயீலுடைய மக்களுக்கு அனைத்து உணவும் ஹலாலாக (அனுமதிக்கப்பட்டதாக) இருந்தது. - இஸ்ராயீல் தம்மீது ஹராமாக்கி கொண்டதை தவிர; " நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், தவ்ராத்தைக்கொண்டு கொண்டு வந்து, அதை ஓதிக்கான்பியுங்கள்" என்று (நபியே) நீர் கூறுவீராக.

7 : 157 - அவர்கள் (நம்பிக்கை கொண்டோர் ) எத்தகையோரென்றால், "உம்மீ (- எழுதப்படிக்க தெரியா) நபியாகிய (நம்) ரசூலைப்பின்பற்றுவார்கள்; அவர் எத்தகையவரேன்றால் அவர்களிடத்திலுள்ள தவ்ராத்திலும் (தோரா) , இன்ஜீலிலும் (பைபிள்) (அவருடைய பண்புகள்) எழுதப்பட்டுள்ளவராக அவரை அவர்கள் காணுவார்கள்; நன்மையைக்கொண்டு அவர்களை அவர் ஏவுவார்; தீமையை விட்டும் அவர்களை அவர் தடுப்பார்; இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் ஹலாலாக்கி வைத்து, கேட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார்; இன்னும் அவர்களை விட்டும், அவர்களுடைய சுமையையும், அவர்களின் மீது ( கடுமையான ஏற்பாடுகளாக இருந்த) விலங்குகளையும் அவர் இறக்கி விடுவார் - ஆகவே, எவர்கள் அவர் மீது ஈமான் கொண்டு, அவரை கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளதே அந்த (வேத) ஒழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்."


4 . பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் (II RAMESSES) உடல்.
10 : 92 - எனவே, இன்று உன்னை - உன்னுடைய (வெற்று) உடலோடு உனக்கு பின் உள்ளவர்களுக்கு நீ ஒரு படிப்பினையாய் இருப்பதற்காக நாம் பாதுகாப்போம்; நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் நம்முடைய அத்தாட்சிகளை விட்டும் மரதியாளர்களாகவே இருக்கின்றனர்.

5 . வேதனையை உணரும் நரம்புகள் நம் தொல்களில்தான் உள்ளன.

4 : 56
- நிச்சயமாக, எவர்கள் நம்முடைய (வேத) வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்கள் நரக நெருப்பில் நாம்
புகச்செய்வோம் ; (அதில்) அவர்களுடைய தோல்கள் கரிந்துவிடும் போதெல்லாம், வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக
அவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவனாகவும்,
ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.

6 . விண்வெளிப்பயணத்தில் இதயம் சுருங்குதல்.

6:125 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.

தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...

நன்றி: சகோ. வசிர் அஹ்மத்.







Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே!