Posts

Showing posts from August, 2010

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்:

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்:
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?.கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.(அல் குர்ஆன் 97: 1-5) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி 2014). லைலத்துல் கத்ர் இரவை (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் தேடுதல்: இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) க…

இஸ்லாமிய திருமணம்-5

இஸ்லாமியதிருமணம்தொடர்ச்சி...
வரதட்சணை ஓர் வன்கொடுமை:
ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது. இதுதான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையான தீர்ப்பாகும்.
இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள்.  இருவருமே ஒருவரிடமிருந்து மற்றொருவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.  ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தை செய்கின்றனர்.  அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும். 
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆன் தனது வீட்டில் இருக்கிறான். தனது தாய், தந்தை மற்றும் உறவினருடன் இருக்கிறான்.  ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள்.  இந்தத் தியகத்திற்க்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை.  அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்…

உறுதியான மலைகள்

Image
உறுதியான மலைகள்:
அல்லாஹ்(SWT) குர்ஆனில் கூறுகிறான்:
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?.  இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?.  (அல் குர்ஆன் 78:6-7).
இன்றைய புவியியல் விஞ்ஞானிகள் மலைகளின் அமைப்பை பற்றியும் அதன்  பலன்கள்              பல அறிய விசயங்களை கண்டறிந்துள்ளனர்.புவியியல் விஞ்ஞானிகளின் தகவலின்படி, மலைகள் புவியின்  மட்டத்திற்குகீழே    ஆழமான வேர்களை  பெற்றுள்ளன. அல்லாஹ்(SWT) குர்ஆனில் ' மலைகளை முளைகளாக' என்று குறிப்பிடுகின்றான்.   இவ்விடத்தில் முளைகள் (ஆப்பு -Pegs) என்பது மிகச் சரியான வார்த்தையாக உள்ளது.   ஏனெனில் வேர்கள் என்று குறிப்பிடும் போது வேர்கள் தரைக்கு  மேலும்  அதாவது  காணும்   வகையிலும் வளர்வதுண்டு          மறைவாக  இருக்கும் மலைகளின்    ஆழமான     உறுதியான அடிப்பாகத்தை முளைகள் என்று குறிப்பிடுவதே    மிகச்சரி  -யானதாகும்.  

மேலும் மலைகள் புவி ஓடு அசையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகவும் மற்றும்  புவி ஓட்டில் அசைவுகள் ஏதும் ஏற்படாது தடுக்கும் காரணியாகவும் இருக்கின்றது. 
மற்றொரு குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் …

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்

Image
'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் :
இன்றைய நவீன அறிவியலறிஞர்கள் மற்றும் வானியல் வல்லுனர்கள் மேகங்களின் வகைகளைப் பற்றியும்,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை சேகரித்துள்ளனர்.  வானியல் வல்லுனர்கள் தகவல்ப்படி, மழை மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான காற்றினாலும், மேகக் கூட்டங்களினாலும் ஓன்று திரட்டப் பட்டு இணைந்து தமக்குரிய வடிவத்தைப் பெறுகின்றன.  மேகங்களின் கூட்டத்தில் ஒரு வகையான மேகமே திரள் கார்முகில்(cumulonimbus cloud) மேகமாகும்.  இந்த திரள் கார்முகில் எனும் மேகம் எங்கனம் உருவாகின்றது?  அவை எவ்வாறு மழை மற்றும் ஆலங்கட்டி (hail) மழையைப் பொழிகின்றது?  மின்னல்கள் எவ்வாறு தோன்றுகின்றன?  போன்ற பல கேள்விகளுக்கான தகவல்களை சேகரித்துள்ளனர்.
கீழ்க்காணும் படிகளின் மூலம் திரள் கார்முகில் மேகங்கள் மழையை உருவாக்குகின்றன:
1.  மேகங்கள் காற்றினால் உந்தப்படுதல்: சின்ன சின்ன துகள்களாக பிரிந்து கிடக்கும் மேகங்களை காற்று உந்துவதனால்  திரள் கார்முகில் மேகங்கள் உருவாகின்றன.  இந்த சிறிய துகள்களான மேகங்களை நாம் முகிற் கூட்டத்திரள் (cumulus cloud)என்கிறோம்.  
படம் 1. செயற்கைக்கோள் புகைப…