உறுதியான மலைகள்

உறுதியான மலைகள்:

அல்லாஹ்(SWT) குர்ஆனில் கூறுகிறான்:

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?.  இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?.  (அல் குர்ஆன் 78:6-7).

இன்றைய புவியியல் விஞ்ஞானிகள் மலைகளின் அமைப்பை பற்றியும் அதன்  பலன்கள்              பல அறிய விசயங்களை கண்டறிந்துள்ளனர்.புவியியல் விஞ்ஞானிகளின் தகவலின்படி, மலைகள் புவியின்  மட்டத்திற்குகீழே    ஆழமான வேர்களை  பெற்றுள்ளன. அல்லாஹ்(SWT) குர்ஆனில் ' மலைகளை முளைகளாக' என்று குறிப்பிடுகின்றான்.   இவ்விடத்தில் முளைகள் (ஆப்பு -Pegs) என்பது மிகச் சரியான வார்த்தையாக உள்ளது.   ஏனெனில் வேர்கள் என்று குறிப்பிடும் போது வேர்கள் தரைக்கு  மேலும்  அதாவது  காணும்   வகையிலும் வளர்வதுண்டு          மறைவாக  இருக்கும் மலைகளின்    ஆழமான     உறுதியான அடிப்பாகத்தை முளைகள் என்று குறிப்பிடுவதே    மிகச்சரி  -யானதாகும்.  

  
படம் 1. புவிபரப்பிற்கு கீழே மலைகள் ஆழமான முளைகளை பெற்றிருக்கின்றன.
படம் 2. நிழற்ப்படம்- மலைகளின்  முளைகள் முழுவதுமாக நிலப்பரப்பினால் மறைக்கப்பட்டுள்ளன.

படம் 3. ஆழமான வேர்களினால் முளைகள் போன்று தோற்றமளிக்கும் மற்றொரு வரைபடம்.
மேலும் மலைகள் புவி ஓடு அசையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகவும் மற்றும்  புவி ஓட்டில் அசைவுகள் ஏதும் ஏற்படாது தடுக்கும் காரணியாகவும் இருக்கின்றது. 

மற்றொரு குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). (அல் குர்ஆன்16:15).

படம் 4. மலைகள் நிஜப்படம். 


இன்றைய நவீன புவித்தட்டு கட்டமைப்பு கொள்கையின்படி,  மலைகள் பூமி அசையாமல் இருப்பதற்கான ஒரு நிலைப்பான்களாய் இருக்கின்றது.  இத்தகைய அறிய உண்மைகளை 1960-க்கு பிறகு கண்டுபிடித்த புவித்தட்டு கட்டமைப்பு கொள்கைகளின் மூலம் நாம் அறிகின்றோம்.  சுமார் 1400 முன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மலைகளின் வடிவத்தைப் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. இத்தகைய அறிவியல் உண்மைகளை பறைசாற்றும் குர்ஆன்   இறைவனிடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.


Reference:
islamreligion.com
islam-guide.com

Comments

Post a Comment

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: