Posts

Showing posts from September, 2010

இஸ்லாம்: பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 
அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.
1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்! அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: – அல்லாஹ் கூறுகிறான்: - “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105) ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: - நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - முனாபிஃக்கின் அடையாளம் மூன்று பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான் நம்பின…

பிரபஞ்சத்தின் தோற்றம் (The BigBang)

Image
பிரபஞ்சத்தின் தோற்றம்: (The Big Bang)
20 -ம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் அதன் நிறை மற்றும் அளவில் எல்லையற்றது என்றும் அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்ற கருது நிலவியது.  ஆகவே இக்கோட்பாட்டை 'நிரந்தர பிரபஞ்ச திட்டம்' (Static Universe Model) என்று அழைத்தனர்.
நாத்திக தத்துவங்களுக்கு அடித்தளமிட்ட இக்கோட்பாடு இறைவனை மறுத்ததோடு பிரபஞ்சம் நிலையான மாற்றமடையாத பொருட்களின் குவியல்களால் ஆனது என்று வாதிட்டது.  இருப்பினும் 20 -ம் நூற்றாண்டில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் காரணமாக நிரந்தர திட்டம் என்ற நாத்திக கோட்பாடு குப்பையில் தூக்கி எறியப்பட்டது.  பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் அது ஒரு பெரு வெடிப்பின் மூலம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உருவானது என்றும் பல்வேறுவகையான ஆய்வுகளையும்,  அவதானிப்புகளையும் மேற்கொண்ட உலக புகழ்ப் பெற்ற சிந்தனையாளர்களுடன் சேர்ந்து பௌதீகவியலும் கூறுகின்றது.  மேலும் இப்பிரபஞ்சம் நிலையானது நாத்திகர்கள் பிடிவாதமாக போராடிய போதிலும் அவர்களின் கருத்துக்கள் விஞ்நானதிற்க்கு எதிரானவை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.
அதற்கு மாற்றமாக பிரபஞ்சம் தொடர்ந…

பூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்:

அல் குர்ஆனில் அல்லாஹ்(SWT) கூறுகின்றான்: (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, (அல்-குர்ஆன்: 86-11).
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.(அல்-குர்ஆன் 2-22).
இறைவன்  தனது முதல் வசனத்தில் 'திரும்ப திரும்ப பொழியும் வானத்தின் சத்தியமாக' என்று தனக்கே உரிய சிறப்பான நடையில் கூறுகின்றான்.  இஸ்லாமிய கொள்கைகளின் படி,  இத்தகைய உயர்ந்த நடையில் சுத்தமான கருத்து தனது படைபாளனாகிய இறைவனிடம் இருந்து மட்டும் தான் கூறமுடியும் என்று ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் விசுவாசம் கொள்வான்.
இரண்டாம் வசனத்தில் 'பூமியை விரிப்பாகவும் (தங்குமிடமாகவும்) வானத்தை விதானமாகவும்(கூரையாகவும்) என்று அல்லாஹ் கூறுகின்றான். 
இன்றைய அறிவியல் நமக்கு வளிமண்டலங்கள…