பிரபஞ்சத்தின் தோற்றம் (The BigBang)

பிரபஞ்சத்தின் தோற்றம்: (The Big Bang)

20 -ம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் அதன் நிறை மற்றும் அளவில் எல்லையற்றது என்றும் அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்ற கருது நிலவியது.  ஆகவே இக்கோட்பாட்டை 'நிரந்தர பிரபஞ்ச திட்டம்' (Static Universe Model) என்று அழைத்தனர்.

நாத்திக தத்துவங்களுக்கு அடித்தளமிட்ட இக்கோட்பாடு இறைவனை மறுத்ததோடு பிரபஞ்சம் நிலையான மாற்றமடையாத பொருட்களின் குவியல்களால் ஆனது என்று வாதிட்டது.  இருப்பினும் 20 -ம் நூற்றாண்டில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் காரணமாக நிரந்தர திட்டம் என்ற நாத்திக கோட்பாடு குப்பையில் தூக்கி எறியப்பட்டது.  பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் அது ஒரு பெரு வெடிப்பின் மூலம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உருவானது என்றும் பல்வேறுவகையான ஆய்வுகளையும்,  அவதானிப்புகளையும் மேற்கொண்ட உலக புகழ்ப் பெற்ற சிந்தனையாளர்களுடன் சேர்ந்து பௌதீகவியலும் கூறுகின்றது.  மேலும் இப்பிரபஞ்சம் நிலையானது நாத்திகர்கள் பிடிவாதமாக போராடிய போதிலும் அவர்களின் கருத்துக்கள் விஞ்நானதிற்க்கு எதிரானவை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.

அதற்கு மாற்றமாக பிரபஞ்சம் தொடர்ந்து அசைந்து மாற்றமடைந்து விரிவடைந்து செல்கிறது என்ற கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட  இத்தகைய உண்மைகள் நிரந்தர பிரபஞ்ச திட்டம் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியில் அறையப்பட்ட ஆணிகளாக கருதப்படுகின்றன.  இன்று இவ் அனைத்து உண்மைகளையும் விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.  

பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அல் குர்ஆனில்  பின்வரும் வசனங்களின் மூலம் விளக்குகின்றது.  

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ( அல்-குர்ஆன் 6 :101 ).

இக்கூற்று இன்றைய நவீன விஞ்ஞானத்தோடு முற்றிலும் உடன்படுகிறது.  இன்று கிடைக்கப் பெற்றுள்ள Astrophysics எனும் விண் இயற்பியலின் முடிவுகளின் படி பிரபஞ்சமானது முன்னர் பதார்ததினதும் (Matter) , காலத்தினதும் (Time) , பரிமாணம் இணைந்ததாகவே காணப்பட்டது.  பின்னர் எப்போதோ ஏற்பட்ட ஒரு பெரு வெடிப்பின் மூலம் முழு பிரபஞ்சமும் தோற்றம் பெற்றது.  இந்நிகழ்வானது 'பெருவெடிப்பு' (The BigBang) என்று அழைக்கப்படுகிறது.  இக்கோட்பாடு பிரபஞ்சமானது ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து தோன்றியதை சுட்டிக்காட்டுகிறது.  பிரபஞ்சத்தின் தோற்றப்பாடு குறித்து விளக்குகின்ற ஒரே கோட்பாடாக 'பெருவெடிப்புக் கோட்பாட்டை' தான் இன்றைய நவீன விஞ்ஞானம்  குறிப்பிடுகின்றது.  சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புள்ளியிலிருந்து பிரபஞ்சம் உருவானது என்பதை அனைத்து விஞ்ஞான பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.  


 பெருவெடிப்புக்கு முன்னர் 'பதார்த்தம்'(Matter) என்ற ஒரு பொருள் காணப்படவில்லை.  இல்லாமை (nothingness) என்ற இந் நிலையில் பதார்த்தமோ , சக்தியோ (Energy), குறைந்தது காலமோ (Time) காணப்படவில்லை.  அதீத பௌதீகவியலின் (Metaphysics)  விளக்கத்தின் படி,  பதார்த்தம், சக்தி, காலம் யாவும் அப்போது இருக்கவில்லை.  இந்த உண்மையானது நவீன பௌதீகவியலினால் சில வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்க முடிந்த போதிலும் அல்-குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே இதனைக் குறிப்பிட்டது.  
   
The Quran miracles 

Comments

  1. The great scintist darvin proofed this!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: