Posts

Showing posts from August, 2013

நன்மைகளின் வாயில்கள்!

நன்மைகளின் வாயில்கள்!வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்) காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்) நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்: யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ) பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்! “யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒர…