Posts

Showing posts from October, 2013

நவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்!

நவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்!

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக. உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”
அதிகமதிகம் கேட்டு அறிமுகமான வசனங்கள்தான் இவை. இறக்கியருளப்பட்ட வரிசைப்படி பார்த்தால் இவைதான் ஆரம்ப இறைவசனங்கள். கல்வியின் துவக்க ஆண்டுகளில் இந்த வசனங்கள் ஓதப்பட்டு விளக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
பேனா, எழுத்துகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த வசனங்கள் எடுத்தியம்புகின்றன. அத்தோடு நின்று விடவில்லை. இந்த வசனங்களுக்கு இன்னொரு நிகழ்வும் பின்னணியில் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் அப்பாஸ் (ரலி) அந்த அனுபவத்தை நினைவுகூர்கிறார்.
மக்காவில் பரிசுத்த கஅபா ஆலயத்தில் அமர்ந்திருந்தார் அப்பாஸ் (ரலி). அந்தச் சமயத்தில் அபூஜஹ்ல் அங்கே வந்தான். அங்கே கூடியிருந்த மக்களிடம் அவன் கேட்டான்: “உங்கள் முன்னால் வைத்து முஹம்மத் இங்கே இந்த மண்ணில் முகம் பதித்து சாஷ்டாங்கம் செய்கின்…

ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்!

காலங்கள் மாறிவிட்டன. எல்லாம் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் அனைவரும் பேசக் கூச்சப்பட்ட விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக அலசப்படுகிறன.

ஆபாசம்... எங்கு பார்த்தாலும் ஆபாசம்...! வீட்டின் நடுப் பகுதி வரை தொலைக்காட்சி வழியாக ஆபாசம் அலை மோதுகிறது. சிறு வயதிலேயே அனைத்து ஆபாசங்களையும் கண்டே குழந்தைகள் வளர்கின்றன.

இதன் விளைவு – பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன!

பாழாய்ப் போன சினிமாக்களைப் பார்ப்பதனால் சிறு வயதிலேயே கை, கால் வைத்து காதல்கள் முளைக்கின்றன. கண்டதும் காதல், சாகும் வரை காதல், காதலுக்காக உயிர் நீத்தல் தியாகிப் பட்டம் என்று செயற்கைகளை சினிமாக்கள் அள்ளித் தெளிக்கின்றன.

இவற்றைப் பார்க்கின்ற பிஞ்சு உள்ளங்களில் ஆழப் பதிகின்றது நஞ்சு. கண்டவனோடும் ஓடிப் போகும் அவலம்! நம் சமுதாயக் கண்களாம் பெண்களிடம் இப்பொழுது இது அதிகரித்து வருகின்றது.

பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். பள்ளிக் கூடங்களுக்கு அனுப்ப பயம். கல்லூரிக்கு அனுப்ப பயம். யாரையும் தன் மகன் காதலித்து விடுவானோ, எவனோடும் தன் மகள் ஓடிப்  போய் விடுவாளோ என்று அன்றாடம் அலறும் எத்தனையோ பெற்றோர்…

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே ! ! !

Image
"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

              "மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)


               நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்கள…

அல்லாஹ்வின் நேசம் பெற்றவர்

   2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."       3:31. (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.    3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். 3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதை…
அல்லாஹ்வின் நேசம் பெறாதவர் 2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. 2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. 2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. 3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான். 3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே …
        குர்ஆன் உங்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியதா?உலகில் தாம் வாழும் காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்ட நபித் தோழர்கள் இஸ்லாத்திற்காக பல சோதனைகளை கடந்து ஈற்றில் உயிரை விடவும் துணிச்சல் பெற்றார்கள் என்றால் அதற்குறிய முக்கிய காரணம் குர்ஆன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய அபார மாற்றமேயாகும். ஸஹாபாக்கள் குர்ஆனை படித்ததுடன் மாத்திரம் நின்று விடாமல், அதனை செயல் வடிவிலும் கொண்டுவர எந்தளவுக்கு ஆர்வம் காட்டினால்கள் என்றால்பத்து வசனங்களை படித்து அதனை தம் வாழ்வில் நடை முறைப்படுத்திய பின்னரே மற்ற வசனங்களை அறிந்து கொண்டார்கள். ''நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனை கற்றோம். நபியவர்களிடம் இருந்து பத்து வசனங்களை கற்றுக் கொள்வோம், அதிலுள்ளதை கற்றுக் கொண்டு செயல்படுத்திய பின்னர் தான் பத்து வசனங்களை கடந்து செல்வோம். என்று நபித் தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். "நாங்கள் திருக் குர்ஆனையும், அதன் செயல்பாட்டையும் சேர்த்தே (நபித் தோழர்களிடம்) கற்று வந்தோம்.'' (அறிவிப்பவர்: அபு அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமிய்யு. நூல் தப்சீர் முஜாஹித் பாகம் 01 பக்கம் 02) பொதுவாக முஸ்லிம…