Posts

Showing posts from June, 2014
முதல் வாள்!

    ஹாஷிம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை. மக்காவில் அவர்களுக்கிருந்த செல்வாக்கும், புனித கஅபாவில் அவர்கள் நிலைநிறுத்தியிருந்த அதிகாரமும், ஆதிக்கமும் அவர்களைத் தடுத்திருக்கலாம்.
        ஆனால், தங்கள் குடும்பத்தில் ஓர் அங்கம் என்ற அடிப்படையில் எதிரிகளின் கைகளில் அண்ணலாரை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. அண்ணலாரின் காரியத்தை எங்களுக்கு விட்டுத் தரவேண்டும் என்று அபூஜஹ்லும், இன்னபிற எதிரிகளும் கோரியபொழுது அபூதாலிப் அதனை உறுதியாக நிராகரித்தார். அவர்களிடம் அவர் முகத்திலடித்தாற்போல் இவ்வாறு கூறினார்:
       “முஹம்மதைச் சுற்றி ஹாஷிம் குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம். உங்கள் வெட்டுகள் முழுவதும் பட்டு விழ வேண்டி வந்தாலும் நாங்கள் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்போம்.”
        அபூதாலிப் இப்படியொரு நிலைப்பாடை எடுத்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் தந்திரமாக நடந்து கொள்ளவில்லையென்றால் பொதுமக்கள் தனக்கெதிராகத் திரும்பி விடுவார்கள் என்று அபூஜஹ்ல் அஞ்சினான். அவனுக்கு அ…
Image
படிப்பினை-02 
தஃவத்திற்குரிய முதற் களம் தனது சமூகமேயாகும், يَا أَيُّهَا النَّمْلُ  - எறும்புகளே! (27:18)        அந்த எறும்பு தன்னுடன் வசிக்கும் தனது எறும்புகளுக்கே அழைப்பு விடுத்தது. அவ்வாறே ; அவரவரது சமூகத்தைப் பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டு   உபதேசம் நல்கவேண்டும். அதனால் தான்   தனது சமூகத்தினது நேர்வழி மற்றும்  வெற்றியைப் பற்றியும்  சிந்திப்பது     ஒரு அழைப்பாளனின் தலையாய கடமையாகும். ஏனெனில் அவர் அவர்களுடனே வாழ்கிறான்.மேலும் குடும்பம் மற்றும்ஏனைய இன்னும் பல தொடர்புகளும் அவர்களுடன் அவரை இணைக்கின்றன. அது மட்டுமன்றி அவர்களுக்கு அவர் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. எனவேதான் அனைத்து  நபிமார்களும்;  ஆரம்பமாகத் தனது சமூகத்தை நோக்கியே அழைப்பு  விடுத்தனர், என்பதை பின்வரும் குர்ஆன்வசனங்கள்,  ஹதீஸ்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்  நூஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்:                                எனது சமூகமே! அல்லாஹ்வையே வணங்குங்கள். (அஃராப்-7:59) ஹூத் (அலை) அவர்கள் கூறினார்கள்:                                 எனது சமூகமே அல்லாஹ்வையே வணங்குங்கள். (அஃராப்- 7:65) நமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்ல…
Image
படிப்பினை-01   ஒளி வீசும் வான்மறையை பாரினில் வாழவந்த நமக்களித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதனைத் தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய நமது உயிரிலும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களது உறவினர்கள் மற்றும் நபித்தோழர்கள் மறுமை வரை அவர்களைப் பின்பற்றும் நல்லோர்கள்,எம்மவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புகழ் எனும் அருளும்,ஈடேற்றமும் கிடைக்கட்டுமாக. இறுதி வேதம் அல்-குர்ஆன் பலவித அற்புதமான,அபூர்வமான சம்பவங்களைத் தன்னகத்தே தாங்கிவந்துள்ளது. அல்லாஹ் எவ்வளவு நுட்பமானவனோ ஞானமிக்கவனோ அவ்வாறே அவனது வார்த்தையான அல்குர்ஆனும் அமைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஒரு முஃமினுக்கு ஐயம் ஏற்பட முடியாது. எனவேதான் அச்சம்பவங்களைக் கூறும் நோக்கத்தைக் குறிப்பிடும் போது அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.            (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது(யூஸூஃப்:111) நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற காரியத்தை மேற்கொள்வதனால் சிறந்த சமுதாயம் என இறைவனால் குறிப்பிடப்பட்ட நாம்;பிரச்சாரப் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு சம்பவமே சுலைமான் …