படிப்பினை-02 

தஃவத்திற்குரிய முதற் களம் தனது சமூகமேயாகும்,
يَا أَيُّهَا النَّمْلُ  - எறும்புகளே! (27:18)
       அந்த எறும்பு தன்னுடன் வசிக்கும் தனது எறும்புகளுக்கே அழைப்பு விடுத்தது. அவ்வாறே அவரவரது சமூகத்தைப் பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டு     உபதேசம்   நல்கவேண்டும். அதனால் தான்   தனது சமூகத்தினது நேர்வழி மற்றும்  வெற்றியைப் பற்றியும்  சிந்திப்பது     ஒரு அழைப்பாளனின் தலையாய கடமையாகும். ஏனெனில் அவர் அவர்களுடனே வாழ்கிறான்.மேலும் குடும்பம் மற்றும்  ஏனைய இன்னும் பல தொடர்புகளும் அவர்களுடன் அவரை இணைக்கின்றன. அது மட்டுமன்றி அவர்களுக்கு அவர் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. எனவேதான் அனைத்து  நபிமார்களும்;  ஆரம்பமாகத் தனது சமூகத்தை நோக்கியே அழைப்பு  விடுத்தனர்என்பதை பின்வரும் குர்ஆன்வசனங்கள்,  ஹதீஸ்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் 
நூஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்:                               
எனது சமூகமே! அல்லாஹ்வையே வணங்குங்கள். (அஃராப்-7:59)

 ஹூத் (அலை) அவர்கள் கூறினார்கள்:                                
எனது சமூகமே அல்லாஹ்வையே வணங்குங்கள். (அஃராப்- 7:65)
நமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது:           (உங்களிலிருந்தே உங்களிடம் ஒரு தூதர் வந்துள்ளார்) (தவ்பா- 9:128) 
அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:                       
 (உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக)) என்ற ஆயத்து இறங்கிய சமயம் நபியவர்கள் எழுந்து நின்று ஏ குறைசிகளே! உங்களது ஆத்மாக்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். உங்களை விட்டும் அல்லாஹ்விடத்திலிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க முடியாது. அப்துமனாபின் மக்களே! உங்களை விட்டும் அல்லாஹ்விடமிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க முடியாது. அப்பாஸே! உம்மை விட்டும் அல்லாஹ்விடமிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க இயலாது. ஸபிய்யாவே! (நபியவர்களது தாய்வழிச் சகோதரி) உம்மை விட்டும் அல்லாஹ்விடமிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க முடியாது.      (புஹாரி:2753)

   தொடரும்……

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன?. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை?

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்: