Posts

Showing posts from August, 2014
Image
குர் -ஆனின்  அத்தாட்சிகள்

ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
          ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது. மணல் குன்றுகளை தோண்டியபொழுது கிடைத்த சிதிலங்கள் திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.
               “ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. ஆது சமுதாயத்தினர் பயன்படுத்திய கிணறு. இக்கிணற்றில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது.
மேலும் ,திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்         உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.…
மணமகனா  ? மார் க்கமா ?உம்மு ஸுலைம் (ரலி)யின் தீர்க்கமான முடிவு 

            உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத அபூதல்ஹா[ரலி] அவர்கள் மணமுடிக்கமுடிக்க நாடி பெண் கேட்டபோது....

    ‘‘அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால் நீரோ ஏக இறைவனுக்கு இணைவைக்கும் இணைவைப்பாளராக இருக்கிறீர். நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று நம்பிக்கை கொண்டால் அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். 
       அவ்வாறே இஸ்லாத்தை ஏற்று அபூதல்ஹா[ரலி] அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.

                        இந்த வரலாற்றுச் செய்தியில், உம்முஸுலைம்[ரலி] அவர்கள் மணமகனை தேர்ந்தடுப்பதில் எதை அளவுகோலாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நற்குணத்தையுடைய, செல்வத்திலும் சிறந்த நிலையில் இருந்த அபூதல்ஹா[ரலி] அவர்கள், உ…
Image
குர் -ஆனின் அத்தாட்சிகள்


 ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும். 

     அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை. 

       அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. 

         பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69 

             ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.ஆதம…
Image
படிப்பினை-03

 தாயி தன் மக்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியாவார் يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ                (உங்களது வசிப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமான் (அலை) அவர்களும் அவரது படைகளும் உங்களை மிதித்து அழித்துவிடாமல் இருக்கட்டும்.)    அந்த எறும்பு முன்நோக்கி வரும் அபாயத்திலிருந்து தப்பிக்கும் வழியை விளக்க தனது கூட்டத்திடம் அலைந்தது. அதாவது மரணத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள வசிப்பிடங்களுக்குள் நுழைந்துகொள்ளுங்கள் என்பதன் மூலம் தப்பிக்கும் முறையையும்உங்களை மிதித்தது அழித்துவிடாமல் இருக்கட்டும்,என்பதன் மூலம் எதிர்நோக்கியிருக்கும் அபாயத்தையும் உணர்த்தியது. எனவே, அழைப்புப் பணியில்தன் கூட்டம் செல்ல வேண்டிய நேரான பாதையை விளக்குவதுடன் அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக வழிகேடான பாதைகளில் செல்வதன் விளைவை விட்டும் ஷைதான் அலங்கரித்துச் சித்தரிப்பதன் அபாயத்தை விட்டும் அவர்களை எச்சரிக்கவும் வேண்டும்.      அல்லாஹ் பிர்அவ்னுடைய குடும்பத்திலிருந்த விசுவாசி கூறிய வார்த்தைகளைக் கூறுகையில், “(என்னுடைய சமூகமே! இப்பூமியில் நீ…